நாட்டை முடக்குவது குறித்து இராணுவ தளபதியின் கருத்து

நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையை தாம் ஏற்றுக் கொள்வதாகவம், உயிரிழப்புக்களின் எண்ணிக்கையும் நாளாந்தம் அதிகரிக்கின்றதாகவும் கொவிட் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவரும், இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். நாட்டை முடக்க வேண்டாம்; நாங்கள் பொறுப்பாக நடந்து கொள்கின்றோம் என்று மக்கள் கூறுவதனாலேயே நாட்டை முடக்காது வைத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சுகாதார ஒழுங்கு விதிகளை பின்பற்றி கொவிட் பரவலைக் கட்டுப்படுத்த மக்கள் ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.