கொரோனா தொற்றுக்குள்ளாகி இறந்த 42 பேரின் சடலங்களை தகனம் செய்வதற்கு, ராகம சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ராகம போதனா வைத்தியசாலையில் பிரேத அறையில் உள்ள கொரோனா தொற்றுக்குள்ளாகி இறந்தோரின் சடலங்களே, தகனம் செய்யப்பட்டவுள்ளன.

அந்த பிரேத அறையில் சடலங்களை வைப்பதில் நெருக்கடியான நிலைமையொன்று எற்பட்டிருந்தது அதனையடுத்தே 42 சடலங்களையும் ஒரேநேரத்தில் தகனம் செய்வதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.