இலங்கை மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தால் கொள்வனவு செய்யப்பட்ட மேலும் ஒரு தொகை சினோபார்ம் தடுப்பூசி டோஸ்கள் 08.08.2021 அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளன.அதன்படி, 1.86 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசி டோஸ்கள் நாட்டை வந்தடைந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.

இதற்கமைய, இதுவரை 14.7 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசி டோஸ்கள் இலங்கைக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.