கொலைகார கும்பலினால் அடித்து, துன்புறுத்தி கொலை செய்யப்பட்ட மட்டக்களப்பு பெரியகல்லாறு 2 நாவலர் வீதியை சேர்ந்த 12 வயது தமிழ் சிறுமியின் இறுதிச்சடங்கு இன்று இடம்பெற்ற நிலையில் சிறுமியின் உயிரிழப்புக்கு காரணமானவர்களை தண்டிக்க வேண்டுமென கொட்டும் மழையிலும் மக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.சிறுமியின் கொலை தொடர்பாக இன்று காலை பெரியகல்லாறு பகுதியில் சிறுமியின் கொலையுடன் தொடர்புபட்ட வர்களை கைது செய்யுமாறு கோரி அப்பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அத்துடன் குறித்த சிறுமியின் கொலைக்கு காரணமானவர்களை உடன் கைது செய்யுமாறு கோரி கொழும்பு குற்றத்தடுப்பு அதிகாரிகளுக்கு நாளைய தினம் முறைப்பாட்டுக் கடிதம் ஒன்றையும் அனுப்பிவைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சிறுமியின் தாயார் வேலைவாய்ப்புக்காக வெளிநாடு சென்றுள்ள நிலையில் , அவரின் சகோதரியின் பாதுகாப்பில் விட்டுச்செல்லப்பட்ட சிறுமியே இவ்வாறு கொடூர தாக்குதலுக்குள்ளான நிலையில் உயிரிழந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் குறித்த சிறுமியின் மரணம் மட்டக்களப்பில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.