கொழும்பில் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட 245 கொவிட் தொற்றாளர்களில் அதிகளவிலானோர் வெள்ளவத்தை பகுதியிலேயே அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொவிட்-19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவிக்கின்றது..

அதன்படி வெள்ளவத்தை பகுதியில் 48 கொவிட் தொற்றாளர்கள் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் வெள்ளவத்தைக்கு அடுத்தப்படியாக வெல்லம்பிட்டி பகுதியிலேயே அதிகளவிலான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வெல்லம்பிட்டி பகுதியில் 42 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்த மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் கொள்ளுபிட்டி பகுதியில் 17 தொற்றாளர்களும், கிருலபனை பகுதியில் 13 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.