யாழ்ப்பாணத்தில் பட்டப்பகலில் ஒருவர் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

யாழ் புத்தூர் சந்தி, பகுதியில் சற்றுநேரத்தின் முன்னர் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வீதியால் சென்ற குறித்த நபரை இனம்தெரியாத நபர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தப்பியோடி விட்டார்.

சம்பவத்தில் ஐயாத்துரை மோகனதாஸ் (47) என்பவர் கத்திக்குத்திற்கு இலக்கான நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் குறித்த நபர் உயிரிழ்ந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.