புத்தளம் – வண்ணாத்துவில்லு – எலுவான்குளம் பகுதியிலுள்ள வயல் நிலமொன்றில் நூற்றுக்கணக்கான பறவைகள் இறந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேற்றைய தினம் எலுவான்குளம் பகுதியில் இந்த பறவைகள் இறந்துள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்த பின்னணியில், உடனடியாக விசாரணைகளை ஆரம்பித்ததாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவிக்கின்றது.

எனினும் குறித்த பறவைகள் இறந்தமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என அறிய முடிகின்றது.

இந்நிலையில் , பயிர்களுக்கு தெளிக்கப்பட்ட பூச்சுக் கொல்லிகள் காரணமாக இந்த பறவைகள் இறந்திருக்கலாம் என சிலர் சந்தேகம் வெளியிடுகின்றனர்.

நெல் குருவி உள்ளிட்ட பல வகையிலான பறவைகளே இவ்வாறு மர்மமான முறையில் இறந்துள்ளன.

மேலும், இந்த சம்பவம் தொடர்பில் வனஜீவராசிகள் திணைக்களம் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.