இராணுவத்தினரை தனிமைப்படுத்த பாடசாலைகளை பயன்படுத்த போவதில்லை என இராணுவத் தளபதியால் நேற்று கூறப்பட்டது.

இந்நிலையில் சாவகச்சேரி நகரமத்தியில் அமைந்துள்ள டிறிபேக் கல்லூரியிலும் இன்று அதிகாலை 1.00 மணியளவில் இரண்டு பேரூந்துகளில் அழைத்து வரப்பட்ட சுமார் 45 வரையான இராணுவத்தினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

தென்மராட்சியிலேயே மக்கள் அதிகமாக கூடுகின்ற இடமாக சாவகச்சேரி நகரம் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

மக்களை கட்டுப்படுத்துவதற்காக பயன்படும் இராணுவ தரப்பினரின் பாதுகாப்பு இடமாக அமையலாம் என அறியமுடிகின்றது.
ஆகையால் மக்கள் இராணுவத்தினருக்கும் போலீசாருக்கும் ஒத்துழைப்பினை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்