பொலிஸாரிடம் இலங்கை மனித உரிமைகள் மத்திய நிலையம் விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்!

ஊரடங்கு சட்ட அனுமதி பத்திரத்தை விநியோகிக்கும் போது உரிய நடைமுறையை பின்பற்றுமாறு இலங்கை மனித உரிமைகள் மத்திய நிலையம் பொலிஸாரை கேட்டுள்ளது.

பதில் பொலிஸ்மா அதிபருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இலங்கை மனித உரிமைகள் மத்திய நிலையத்தின் நிறைவேற்று பணணிப்பாளர் சுரங்கி அரியவங்ச இதனை தெரிவித்துள்ளார்.

பொது பாதுகாப்புக்காக ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டாலும் குறித்த அனுமதிபத்திரத்தை காட்டி ஏராளமான மக்கள் வீதிகளில் நடமாடுவதாக அந்த மத்திய நிலையம் கூறியுள்ளது.

பெரும்பாலான வாகனங்களில் அத்தியாவசிய சேவைகளை கொண்டுச் செல்வதற்கான பத்திரங்கள் காட்சிப்பட்டிருப்பதை காண முடிவதாக தெரிவித்துள்ள அந்த மத்திய நிலையம், ஊரடங்கு உத்தரவு அனுமதி பத்திரத்தை பெற்று போக்குவரத்தில் ஈடுபடுவதாக தெரிவித்து சிலர் போக்குவரத்தில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.

சமூக இடைவெளியை பேணுவதன் மூலமே இந்த தொற்றுநோயைத் தடுக்க முடியும் எனவும் ஆனால் அதிக எண்ணிக்கையிலான ஊரடங்கு உத்தரவு அனுமதி மற்றும் உரிமை பத்திரங்கள் வழங்கப்படுவதாக அந்த மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இது மிகவும் ஆபத்தான சூழ்நிலை என அவர் தெரிவித்துள்ளதுடன், எனவே குறித்த அனுமதி பத்திரங்களை விநியோகிக்க முறையான திட்டம் ஒன்று இல்லாவிட்டால் எதிர்வரும் நாட்களில் அத்தியாவசிய சேவைகள் கூட நிறுத்தும் நிலை ஏற்படலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே, இதுபோன்ற சூழ்நிலையைத் தடுக்க நாடு என்ற வகையில் அனைவரும் விரைந்து செயற்பட வேண்டும் எனவும் இதனை கருத்திற்கொண்டே ஊரடங்கு உத்தரவு அனுமதி பத்திரத்தை விநியோகிக்க வேண்டும் எனவும் இலங்கை மனித உரிமைகள் மத்திய நிலையத்தின் நிறைவேற்று பணிப்பாளர் பதில் பொலிஸ்மா அதிபருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளார்.


About Microwin

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.