படைத் தளங்களின் சுகாதாரப் பாதுகாப்பை உறுதிப்படுத்த பிரத்தியேக சனாதிபதி செயலணி - கோட்டாபய

படைத் தளங்களின் சுகாதாரப் பாதுகாப்பை உறுதிப்படுத்தவென பிரத்தியேக சனாதிபதி செயலணி, மேற்கு மாகாண ஆளுநர் மார்ஷல் ஒப் த எயர் போர்ஸ் ரொஷான் குணதிலக தலைமையில்..


முப்படையினரதும் முகாம்களின் சுகாதாரப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை கண்டறிவதற்காக, இன்று முற்பகல், சனாதிபதி செயலகத்தில் - ஓய்வுபெற்ற பாதுகாப்பு படைத் தளபதிகள் மற்றும் சிறப்பு வைத்திய நிபுணர்களுடன் ஒரு கலந்தாராய்வில் ஈடுபட்டேன்.

பாதுகாப்புச் செயலாளர் மற்றும் முப்படை தளபதிகளின் வழிகாட்டலுடன் இராணுவ முகாம்களில் முழுமையான சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு முறையான நிகழ்ச்சித் திட்டம ஒன்றை தயாரித்து, அதனை நடைமுறைப்படுத்தும் மற்றும் கண்காணிக்கும் பொறுப்பு மேற்படி புதிய சனாதிபதி செயலணியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

'மக்களையும் முப்படை அதிகாரிகளையும் நோய்த் தொற்றிலிருந்து பாதுகாப்பது முக்கியமானதாகும். தொற்றுடையவர்களுடன் நெருங்கிப் பணியாற்ற வேண்டியுள்ள குழுக்கள் குறித்து பிரத்தியேக கவனம் செலுத்தப்பட வேண்டும். நோயாளிகளை வைத்தியசாலைகளுக்கும் அவர்களுடன் தொடர்புடையவர்களை நோய்த்தடுப்பு நிலையங்களுக்கும் அனுப்ப வேண்டும். முன்னுரிமை அளிக்கப்பட வேண்டியது - சமூகத்தில் நோய்த்தொற்றுப் பரவுவதைத் தடுப்பதாகும்' என்று நான் செயலணியிடம் தெரிவித்தேன்.

முப்படைகளினதும் அனைத்து முகாம்களையும் கண்காணித்து - அவற்றின் சுகாதார நிலைமைகள் தொடர்பாக உடனடியாக அறிக்கையொன்றைச் சமர்ப்பிக்குமாறு நிபுணர்கள் குழு ஒன்றிடம் நான் பணித்திருக்கின்றேன்.

நோய்த்தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள படை வீர்ர்களின் சுகாதாரப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். எனவே, முகாம்களில் சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்காகத் தேவையின் அடிப்படையில் விசேட வைத்திய நிவுணர்களின் உதவியை பெற்றுக்கொள்ளுமாறும் செயலணிக்கு நான் அறிவுறுத்தினேன்.

நோயை கட்டுப்படுத்துவதில் இதுவரை அடைந்துள்ள வெற்றியைப் போன்றே - எங்கேனும் தவறுகள் ஏற்பட்டிருப்பின், அவற்றையும் உடனடியாகக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தையும் செயலணியிடம் நான் சுட்டிக்காட்டினேன்.

எனது செயலாளர் பி. பீ. ஜயசுந்தர, எனது தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, முன்னாள் வான்படைத் தளபதி, மேற்கு மாகாண ஆளுநர் மார்ஷல் ஒப் த எயர் போர்ஸ் ரொஷான் குணதிலக, முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் (ஓய்வுபெற்ற) ஜயந்த பெரேரா, சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் (ஓய்வுபெற்ற) அனந்த பீரிஸ், மேஜர் ஜெனரல் சுமேத பெரேரா, சிறப்பு வைத்திய நிபுணர்களான பந்துல விஜேசிறிவர்த்தன, வஜிர சேனாரத்ன ஆகியோரும் இன்றைய கலந்தாராய்வில் கலந்துகொண்டனர்.

-கோட்டாபய ராஜபக்‌ஷ-

About Microwin

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.