பி.சி.ஆர் பரிசோதனை வடக்கில் உடனடியாக அதிகரிக்கப்பட வேண்டும்

கொரோனோ தொற்று பரிசோதனை வடக்கில் உடனடியாக அதிகரிக்க வேண்டு என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வட மாகாண இணைப்பாளர் காண்டிபன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர்  ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது –

வெலிசர கடற்படை முகாமிலிருந்து வீடு திரும்பிய கடற்படைச் சிப்பாய்கள் அதிகளவில் கொரோனா தொற்றுக்குள்ளாகி வருவதனால் அவர்கள் விடுமுறையில் சென்ற நான்கு மாவட்டங்கள் புதிதாக கொரோனா தொற்று மாவட்டங்களாக இனங்காணப்பட்டுள்ளமையை அடுத்து மொத்தமாக இலங்கையில் 20 மாவட்டங்களில் அந்த நோய்த்தாற்று பரவியுள்ளது.

இதில் இன்று திருகோணமலை மாத்தளை மொனராகலை அனுராதபுரம் ஆகியன இணைந்துள்ளன. இதனால் இலங்கையில் கொரோனா தொற்றில்லா பகுதிகள் சடுதியாகக்  குறைந்து வருகின்றது.

மேலும் இத் தொற்றானது சிப்பாய்களுக்கு பரவியது போன்று சுகாதார சேவையில் ஈடுபடுவர்களுக்கும் பரவுவதற்கு அதிக அளவிலான சந்தர்ப்பங்கள் உள்ளது.

ஊரடங்கு நீக்கப்பட்டுள்ள வடமாகாணத்தில் மக்கள் வைத்தியசாலைக்கு வருவது அதிகரித்து உள்ளது. அத்துடன் மீண்டும் வைத்தியசாலையினை பழைய நிலையில் இயக்குமாறு சுகாதார சேவைகள்  பணிப்பாளர் நாயகம் சுற்றறிக்கையின் முலம் கேட்டுள்ளார்.

ஆயினும் அவ்வாறு சேவைகளை விஸ்தரிக்க பல வைத்தியசாலைகளில் இன்னமும் முகக்கவசம் தனி நபர் பாதுகாப்பு அங்கிகளுக்கு பற்றாக்குறை உள்ளது.

நோயாளிகள் வரும்போது சரியான தடுப்பு  நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் நோயாளிகளிடம் இருந்து சுகாதார பணியாளருக்கு  கொரோனா தொற்றலாம் என சுகாதார சேவைகளில் ஈடுபடுவர்களுக்கு ஒரு அச்சம் உள்ளது. இத்தகைய நிலையில் நாங்கள் எமது பரிசோதனைகளை பல்வேறுபட்டவர்களுக்கு விஸ்தரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் நாளாந்தம் வருகின்ற சந்தேகத்திற்குரிய தொற்றாளர்களுக்கு சோதனை செய்தல்., உறுதிப்படுத்தப்பட்ட தொற்றாளர்களிற்கு மீண்டும்  சோதனைகளை செய்தல், ஆரம்ப பரிசோதனையில் தொற்றில்லை என கண்டுபிடிக்கப்பட்டவர்களுக்கு சோதனைகளை மீண்டும் மீண்டும் பரிசோதனைகளை செய்தல். தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளுடன்  நேரடி தொடர்புகளைக் கொண்டிருந்தவர்களை சோதனை செய்தல். தனிமைடுத்தப்பட்ட முகாங்களிலிருந்து விடுவிக்கப்பட்டு சமூகத்திற்கு இனணக்கப்பட முன்னர் சோதனைகளை மேற்கொள்ளல் வெளிநாட்டிலிருந்து வருகை தந்த சகல தரப்பினரையும் சோதனை செய்தல், கொரோனா தொற்று அறிகுறிகளை காட்டுகின்ற சுகாதார சேவைகள் பணியாளர்கள் மற்றும் இராணுவம் உள்ளிட்ட தொற்றுக்குள்ளாக கூடிய அபாயம் உள்ளவர்க்களுக்கு சோதனை செய்தல் என்ற வரையறைக்கள் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

இந்நிலையில் நாளாந்தம் சோதனை செய்ய வேண்டியவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதனால் ஒரு நாளைக்கு 1500 வரை பரிசோதனைகளை  கூட்ட வேண்டிய தேவை இருக்கிறது.  அண்மையில் நடைபெற்ற கூட்டத்தில் தனியார் துறையினால் 400 பேருக்கும் அரசாங்கத்தின் பரிசோதனை நிலையங்களில் 1000 பேருக்கும் செய்ய முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆகையினால் வடமாகாணத்திலும் இப் பரிசோதனைகளை மேற்குறிப்பிட்டவர்களுக்கு  அதிகரிப்பதற்கு சுகாதார அதிகாரிகள் தங்கள் கவனத்தை செலுத்துமாறும் வைத்தியசாலைகளில் பணியாற்றும் பணியாளர்களுக்கு தேவையான முகக்கவசம் தனி நபர் பாதுகாப்பு அங்கிகளை தொடர்சியாக வழங்குவதையும் உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

About Microwin

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.