சாதாரண தரப்பரீட்சை பெறுபேறு எதிர்பார்த்தளவு கிடைக்கவில்லை என்ற விரக்தியில் மாணவி ஒருவர் இன்று (28-4-2020) காலை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதனால் அப்பகுதியே சோகமயமாக உள்ளது.

குறித்த சம்பவத்தில் சிலாவத்தை பகுதியைச் சேர்ந்த சந்திரன் கம்சிகா (வயது 17)  என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த மாணவி சாதாரண தரப்பரீட்சைக்குத் தோற்றினார் என்றும் அவர் எதிர்பார்த்த பெறுபேற்றை விட குறைவாகவே கிடைத்ததால் மன உளைச்சலடைந்து தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக என எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த மாணவி சாதாரண தரப் பரீட்சையில் 2A, 3B, 2C ,S சித்தியை பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மாணவியின் இறப்பு தொடர்பான விசாரணைகளை முல்லைத்தீவு பொலிசார் மேற்கொண்டுள்ளதோடு, சடலம் பிரேத பரிசோதனைக்காக மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது