இலங்கையில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், கொழும்பில் 21 இடங்கள் முற்றாக முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, கொழும்பு 14, நாகலகம் வீதி, கொழும்பு 13 கொட்டாஞ்சேனை வீதியின் 64ம் தோட்டம், கொழும்பு 12 பண்டாரநாயக்க மாவத்தை, கொழும்பு 11 குணசிங்கபுர, வாழைத்தோட்டம் பகுதிகள், பம்பலபிட்டி – பிரிஷ்டா பிளேஸ், மருதானையின் இமாமுல் அரூஸ் மாவத்தை, ஆர்னோல்ட் ரத்நாயக்க மாவத்தை, நாரஹேன்பிட்டி தாபரே மாவத்தை, கொழும்பு 7, – சுதந்திர சதுக்கம் – 60ம் தோட்டம், ஹெவலொக் லேன், ஒருகொடவத்த – மஜீத் பிளேஸ், மீத்தோட்டமுல்லை – வெடுகொடவத்தை, பெரேரா மாவத்தை பகுதிகள், வெல்லம்பிட்டி – வெலேவத்தை, மஹபுத்துகமுவ – நவாரவத்தை, மிரிஹானை – விமலவத்த வீதி, தெஹிவளை – றப்பர் தோட்ட வீதி, அருணாலோக்க மாவத்தை, பிலியந்தலை பகுதியின் கிராமோதய மாவத்தை, பண்னிபிட்டிய – பலனவத்த ஆகிய 21 இடங்களே இவ்வாறு முடக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் முடக்கப்பட்ட பகுதிகளான நாரஹேன்பிட்டி தாபரே மாவத்தை, கொழும்பு 7, – சுதந்திர சதுக்கம் – 60ம் தோட்டம் ஆகிய பகுதிகளில் புதிதாக தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.