கொரோனா தடுப்பு நடவடிக்கையில் அவசரநிலையை அறிவித்த நாடுகளில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை கவலை தெரிவித்துள்ளது.

அந்த நாடுகளில் ஆயிரக்கணக்கான மக்கள் காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். சிலர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவில் மோசமாக நடந்து கொண்ட பதினைந்து நாடுகளின் பட்டியலில் இலங்கையையும் உள்ளடக்கியுள்ளது.கொரோனா வைரஸை கட்டுப்படுத்த உலகெங்கிலும் சுமார் 80 நாடுகளில் ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டது. இதில் 15 நாடுகளில் உள்ளவர்கள் துன்புறுத்தலுக்கு ஆளானதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.